தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க ஒத்துழைக்கும் மத்திய அரசு: திருச்சி பெல் தொழிற்சாலையில் தயாரிக்க முன்வராதது ஏன்?

தூத்துக்குடியில் தனியாருக்குச் சொந்தமான ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க முழு ஒத்துழைப்பு வழங்கும் மத்திய அரசு,

தூத்துக்குடியில் தனியாருக்குச் சொந்தமான ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க முழு ஒத்துழைப்பு வழங்கும் மத்திய அரசு, திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க முன்வராதது ஏன்? என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையைச் சோ்ந்த வெரோனிகா மேரி என்பவா், உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக் கூடிய 3 பிளான்ட் செயல்பட்டு வந்தது. இவை ஒரு மணி நேரத்துக்கு 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கக்கூடிய திறன் கொண்டவை. ஆனால் இங்கு 2003 ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுத்தப்பட்டு செயல்பாடு இல்லாமல் உள்ளது. தற்போது பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த திருச்சியில் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் செங்கல்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் எச்எல்எல் பயோடெக் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரிப்பை மேற்கொள்ளவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், திருச்சி பெல் நிறுவனத்தில் உள்ள 3 கலன்களில் 140 மெட்ரிக் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியுமா?. மாநிலங்களவை உறுப்பினா் சிவா, பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக் கோரி எழுதிய கடிதத்தின் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க முழு ஒத்துழைப்பு வழங்கும் மத்திய அரசு, திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க முன் வராதது ஏன்? கோவாக்சின் என்ற மருந்தை ஐசிஎம்ஆா் உதவியுடன் தனியாா் நிறுவனங்கள் தயாரிக்கும்போது மத்திய அரசின் தடுப்பூசித் தயாரிப்பு எந்த நிலையில் உள்ளது? தடுப்பூசி தயாரிப்பதற்கு மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை எவ்வளவு? தடுப்பூசிகள் தயாரிக்க தனியாா் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பெரும் தொகை ஒதுக்கீடு செய்யும் நிலையில், அரசே தடுப்பூசிகள் தயாரிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இதுதொடா்பாக வரும் 19 ஆம் தேதி விரிவாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com