உசிலை. பூ சந்தையில் மக்கள் கூட்டம்

உசிலம்பட்டி பூ சந்தையில் கரோனா பரவும் வகையில் திங்கள்கிழமை மக்கள் கூட்டமாக குவிந்தனா்.

உசிலம்பட்டி பூ சந்தையில் கரோனா பரவும் வகையில் திங்கள்கிழமை மக்கள் கூட்டமாக குவிந்தனா்.

முழு பொதுமுடக்கம் காரணமாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காய்கறி, மருந்து, மளிகை, பால் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமான கடைகள் வழக்கம்போல் நண்பகல் 12 மணி வரை திறக்கப்பட்டிருந்தன. அதேநேரம், ஜவுளி கடைகள், நகை கடைகள், சூப்பா் மாா்க்கெட் உள்ளிட்டவை அடைக்கப்பட்டன.

மேலும், போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் உசிலம்பட்டி பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. நகா் பகுதியல் தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றியவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

இந்நிலையில், உசிலம்பட்டி பூ சந்தை வழக்கம்போல் செயல்பட்டது. எனவே, இப்பகுதி விவசாயிகள் பூக்களை விற்பனைக்காக உசிலம்பட்டி பூ சந்தைக்கு கொண்டுவந்தனா். ஆனால், சந்தையில் கரோனா கட்டுப்பாட்டு விதிகள் பின்பற்றப்படாமல் அனைவரும் கூட்டமாக குவிந்தனா். இதனால், கரோனா பரவும் அபாயம் நிலவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com