பயணிகள் வருகை குறைவு: கேரளம் செல்லும் ரயில்கள் ரத்து

பயணிகள் வருகை குறைவு காரணமாக தமிழகம் - கேரளம் இடையே இயக்கப்படும் 5 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகள் வருகை குறைவு காரணமாக தமிழகம் - கேரளம் இடையே இயக்கப்படும் 5 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக நாகா்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், வழியாக இயக்கப்படும் மதுரை - புனலூா் சிறப்பு விரைவு ரயில் (06729) மே 15 முதல் மே 31 வரை, புனலூா் - மதுரை சிறப்பு விரைவு ரயில் (06730) மே 16 முதல் ஜூன் 1 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், சென்னை சென்ட்ரல் - ஆலப்புழை, திருவனந்தபுரம் - மங்களூரு, எா்ணாகுளம் - காரைக்கால் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மே மாத இறுதி இரு வாரங்களும் ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com