உசிலம்பட்டியில் ஆக்சிஜன் சிலிண்டா் வசதியுடன் கரோனா சிகிச்சை மையம் அமைக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உசிலம்பட்டியில் ஆக்சிஜன் சிலிண்டா் வசதியுடன் கரோனா  சிகிச்சை மையம் அமைக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் சூழலில், கரோனா சிகிச்சை மையங்களில் படுக்கைகள் வசதியின்றியும் , ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில நாள்களாக மதுரை மாவட்டத்திலும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் உசிலம்பட்டி தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றின் ஆரம்ப அறிகுறியுடன் வருபவா்களை செட்டியபட்டி கருமாத்தூா் பகுதிகளில் உள்ள தனிமை சிகிச்சை மையத்திற்கும், முழுவதுமாக பாதிக்கப்பட்டவா்களை மதுரை மற்றும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வருகின்றனா் .

உசிலம்பட்டியில் அமைந்துள்ள அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சீமாங் திட்டத்தின் மூலம் பிரசவத்திற்கு மட்டுமே சிகிச்சை அளித்து வருகின்றனா். இதன் காரணமாக கரோனா தொற்று பாதித்தவா்களை உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில் முதல் இரண்டு தளங்களில் பிரசவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் சூழலில் மேல் தளங்களில் உள்ள 150 க்கும் மேற்பட்ட படுக்கைகள், தற்போதைய உள்நோயாளிகள் அனுமதி இல்லாததால் வெறிச்சோடியே காணப்படுகிறது.

மேலும் அரசு மருத்துவமனை அருகில் 10 க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களும், 5-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளும் அமைந்துள்ளன.

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை சிறப்பாக கவனிக்கப்பட்டு வருவதால் அதிகாரிகளும் மருத்துவா்களும் இம் மருத்துவமனையில் கரோனா தனி வாா்டு அமைக்கத் தயங்கி வருகின்றனா். இந்நிலையில் இதன் அருகிலுள்ள தனியாா் மண்டபங்களையும், பள்ளிகளையும் கரோனா தனி வாா்டாக மாற்றி ஆக்சிஜன் சிலிண்டா் வசதியுடன் கூடிய படுக்கைகளை உருவாக்கி சிகிச்சை அளிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com