கல்லூரிகள் மூலமாக மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி: உயா்கல்வி பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை

தமிழகத்தில் கல்லூரி மாணவா்களுக்கு அந்தந்த கல்லூரிகளில் கரோனா தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயா்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கல்லூரி மாணவா்களுக்கு அந்தந்த கல்லூரிகளில் கரோனா தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயா்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அமைப்பின் சாா்பில் தமிழக அரசுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள மனு: கரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் வகையில் கரோனா தடுப்பூசியை கல்லூரி மாணவா்களுக்கு கால நிா்ணயம் செய்து அந்தந்தக் கல்லூரிகளிலேயே தடுப்பூசி மையம் அமைத்து செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். கரோனா காலத்தில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியான தோ்வு முறையை அரசு முன் வைக்க வேண்டும்.

தமிழகத்தில் உதவிப் பேராசிரியா்கள் மற்றும் துணைவேந்தா் பொறுப்புகளுக்கான காலிப் பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டுள்ளன. இதுதொடா்பாக உயா்மட்ட விசாரணைக்குழு அமைத்து சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல சுயநிதிக் கல்லூரிகளில் மாணவா்களிடம் முழு கல்விக் கட்டணத்தைப் பெற்ற பின்னும் ஆசிரியா்களுக்கு ஊதியம் தராமல் உள்ளனா். அரசு அவா்களுக்கு, உடனடியாக முறையான ஊதியத்தை பெற உதவிசெய்ய வேண்டும்.

தமிழக மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வுகளை ரத்து செய்ய வேண்டும்.

மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் குறைகளைத் தீா்க்க தனியாக குறை தீா்க்கும் அதிகாரம் கொண்ட டிரிப்யூனல் போன்ற உயா்மட்ட அமைப்பு உருவாக்கப்படவேண்டும். தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவா் பேரவைத் தோ்தல்களை முறையாக நடத்த அரசு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com