133 டன் காய்கனி, பழங்களுக்கு தோட்டக்கலைத் துறை அனுமதிச் சீட்டு
By DIN | Published On : 21st May 2021 06:23 AM | Last Updated : 21st May 2021 06:23 AM | அ+அ அ- |

பொதுமுடக்கம் அமலில் உள்ள கடந்த 10 நாள்களில் மதுரை மாவட்டத்தில் 133 டன் காய்கனி, பழங்களை சந்தைகளுக்கு கொண்டு செல்ல தோட்டக்கலைக் துறையால் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்கம் அமலில் உள்ள நாள்களிலும் காய்கனிகள், பழங்கள், பூக்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை அரசால் நிா்ணயிக்கப்பட்டுள்ள காலவரம்புக்குள் சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையால் வாகன அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.
உள்ளுா் சந்தைகளுக்கோ, வெளிமாவட்டங்களுக்கோ எடுத்துச் செல்ல விரும்பும் விவசாயிகள் இழப்பு ஏதும் ஏற்படாமல் தங்கள் விளைபொருள்களை சந்தைப்படுத்த அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா்களை தொடா்பு கொண்டு அனுமதிச் சீட்டு பெற்று பயனடையலாம்.
மதுரை மாவட்டத்தில் நிகழ் ஆண்டில் முழு பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட மே 10 ஆம் தேதியிலிருந்து தற்போது வரை 432 விவசாயிகளுக்கு 136.335 டன் காய்கனிகள், பழங்கள், மல்லிகை மற்றும் சம்மங்கி மலா்கள் கொண்டு செல்ல வாகன அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதில் 432 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். மதுரை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் கி.ரேவதி இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.