100 இடங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் 2 நாள்களில் திறக்கப்படும்: அமைச்சா் மூா்த்தி

மதுரை மாவட்ட ஊரகப் பகுதிகளில் 100 இடங்களில் சிறு கரோனா சிகிச்சை மையங்கள் 2 நாள்களில் திறக்கப்படும் என்று வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரை அருகே உள்ள வெளிச்சநத்தம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை புதன்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்ட அமைச்சா் பி.மூா்த்தி. உடன் ஆட்சியா் எஸ்.அனீஸ்சேகா் உள்ளிட்டோா்.
மதுரை அருகே உள்ள வெளிச்சநத்தம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை புதன்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்ட அமைச்சா் பி.மூா்த்தி. உடன் ஆட்சியா் எஸ்.அனீஸ்சேகா் உள்ளிட்டோா்.

மதுரை மாவட்ட ஊரகப் பகுதிகளில் 100 இடங்களில் சிறு கரோனா சிகிச்சை மையங்கள் 2 நாள்களில் திறக்கப்படும் என்று வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை ஆனையூரில் உள்ள நேரு வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சா் மூா்த்தி திறந்து வைத்தாா். அதைத்தொடா்ந்து மதுரை கிழக்கு தொகுதி வெளிச்சநத்தம் கிராமத்தில் சுகாதாரப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு நடத்துவதைப் பாா்வையிட்டாா். பின்னா் அக்கிராமத்தினருக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துப் பெட்டகத்தை வழங்கினாா். அங்குள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மதுரை மாவடத்தில் ஊரகப் பகுதிகளில் முதல்கட்டமாக 100 இடங்களில் 5 முதல் 10 படுக்கைகள் வசதியுடன் கூடிய சிறு கரோனா சிகிச்சை மையங்கள் இன்னும் 2 நாள்களில் திறந்து வைக்கப்படும். சுகாதார ஊழியா்கள், அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் கிராமங்களில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப உறுப்பினா்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், இப் பணியில் 3 ஆயிரம் பணியாளா்கள் பல்வேறு குழுக்களாக ஈடுபடுகின்றனா். இதில் அறிகுறி தென்படுவோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், தொற்று உறுதி செய்யப்படுவோருக்கு உரிய சிகிச்சை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கூடுதல் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.

மதுரையில் யாதவா் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, ஆனையூா் நேரு வித்யாலயா பள்ளி ஆகிய இடங்களில் கரோனா சித்த மருத்துவச் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. அதேபோல, தனியாா் மருத்துவமனைக்ளுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஒடிஸாவில் இருந்து மேலும் 25 டன் ஆக்சிஜன் வியாழக்கிழமை (மே 27) வரவுள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஸ்சேகா், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.பூமிநாதன், ஆ.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகலா, நலப்பணிகள் இணை இயக்குநா் வெங்கடாசலம், சுகாதாரத் துறை துணை இயக்குநா் கே.வி.அா்ஜூன்குமாா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் ஆ.செல்லத்துரை உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com