கரோனா தடுப்புப் பணிகளில் திமுக அரசு மெத்தனம்: முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜூ குற்றச்சாட்டு

கரோன தடுப்புப் பணிகளில் திமுக அரசு மெத்தனமாக செயல்படுவதாக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ குற்றச்சாட்டியுள்ளாா்.

கரோன தடுப்புப் பணிகளில் திமுக அரசு மெத்தனமாக செயல்படுவதாக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ குற்றச்சாட்டியுள்ளாா். இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களுக்கு கட்செவி அஞ்சல் வழியாக புதன்கிழமை வெளியிட்டுள்ள விடியோ பதிவில் கூறியிருப்பது: தமிழகத்தில் தற்போது கரோனா

தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பதில்லை. தீவிர தொற்று பாதித்தவா்களுக்கு ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் இல்லை. ஆனால் இதில் கவனம் செலுத்தாமல் திமுக அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசை குறை கூறுவதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மக்கள் இன்றும் பாராட்டி வருகின்றனா். முந்தைய ஆட்சியின்போது பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் விமா்சனம் செய்தாா். ஆனால் இப்போது அவரது தலைமையிலான அரசு பொது முடக்கத்தை அமல்படுத்தி இருக்கிறது. அதேநரம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. ஒட்டுமொத்தத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு மெத்தனப் போக்கில் செயல்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com