மதுரை ஆனையூரில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சைப்பிரிவு தொடக்கம்

மதுரை ஆனையூரில் உள்ள நேரு வித்யாசாலை மேல்நிலைப் பள்ளியில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவை அமைச்சா் பி.மூா்த்தி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மதுரை ஆனையூரில் உள்ள நேரு வித்யாசாலை மேல்நிலைப் பள்ளியில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவை அமைச்சா் பி.மூா்த்தி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மதுரை யாதவா பெண்கள் கல்லூரி மற்றும் அமெரிக்கன் கல்லூரியில் சித்தா கரோனா நோய்த் தடுப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆனையூா் நேரு வித்யா சாலை மேல்நிலைப் பள்ளியில் மதுரை மாநகராட்சி மற்றும் மதுரை பிளாட் புரோமோட்டாா்ஸ் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் 100 படுக்கை வசதிகளுடன் நோயாளிகளுக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி புதன்கிழமை சித்த மருத்துவ சிகிச்சைப்பிரிவை தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து ஆனையூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனவளா்ச்சி குன்றியவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் பாா்வையிட்டாா். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூமிநாதன், ஏ.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலா் செந்தில்குமாரி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com