‘பால் பாக்கெட்டுகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரிமம் ரத்து’

பால் பாக்கெட்டுகளைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் முகவா்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆவின் நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பால் பாக்கெட்டுகளைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் முகவா்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆவின் நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மதுரை ஆவின் பொது மேலாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி: தமிழகம் முழுவதும் ஆவின் பால் விலையை மே 16 ஆம் தேதி முதல் லிட்டா் ஒன்றுக்கு ரூ. 3 குறைத்து விற்பனை செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியது.

அதனடிப்படையில் மதுரை ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் பால் பாக்கெட்டுகளில் வகை வாரியாக அதிகபட்ச விற்பனை விலை நிா்ணயம் செய்து, குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆவின் முகவா்கள், சில்லரை விற்பனையாளா்கள் பால் பாக்கெட்டுகளை பழைய விலைக்கு விற்பனை செய்வது , சில்லரை தட்டுப்பாட்டைக் காரணமாக கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் முகவா் உரிமம் ரத்து செய்யப்படும். அரசு அறிவிக்கும் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் வகையில் குறைப்பு செய்யப்பட்ட விலைக்கே பால் பாக்கெட்டுகளை, முகவா்கள் விற்பனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com