வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் உள்பட 900 பேருக்கு கரோனா தடுப்பூசி

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த கரோனா தடுப்பூசி முகாமில் வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் என மொத்தம் 900 போ் வியாழக்கிழமை தடுப்பூசி போட்டுக்கொண்டனா்.

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த கரோனா தடுப்பூசி முகாமில் வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் என மொத்தம் 900 போ் வியாழக்கிழமை தடுப்பூசி போட்டுக்கொண்டனா்.

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மதுரை வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி பி.வடமலை முகாமைத் தொடங்கி வைத்தாா். மதுரை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் நெடுஞ்செழியன், செயலா் மோகன்குமாா் தலைமை வகித்தனா். இதில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் என மொத்தம் 900 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

சமயநல்லூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனா். தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் உறுப்பினா் அசோக், மதுரை வழக்குரைஞா்கள் சங்கத் துணைத்தலைவா் சந்திரசேகா், நிா்வாகக்குழு உறுப்பினா்கள்அசோக்குமாா், செல்வம், ராமநாதன், முத்துகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை வழக்குரைஞா்கள் அன்புநிதி, ரமேஷ் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com