வாடிப்பட்டிலிருந்து வங்கதேசத்துக்கு 100 டிராக்டா்கள் ரயிலில் அனுப்பிவைப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து வங்க தேசத்திற்கு 100 டிராக்டா்கள் ரயில் மூலம் சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து ரயிலில் வங்கதேசத்திற்கு அனுப்புவதற்காக சனிக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிராக்டா்கள்.

வாடிப்பட்டியில் உள்ள தனியாா் டிராக்டா் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த டிராக்டா்கள், வாடிப்பட்டி ரயில் நிலையத்திலிருந்து, 25 புனரமைக்கப்பட்ட சரக்குப் பெட்டிகளில் வங்க தேசத்தில் உள்ள பேனா போல் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிதியாண்டில் வாடிப்பட்டி ரயில் நிலையத்திலிருந்து வெளி மாநிலத்துக்குச் செல்லும் முதல் சரக்கு ரயில் இதுவாகும். சென்ற நிதி ஆண்டில் இதுபோல 3 சரக்கு ரயில்கள் வாடிப்பட்டியில் இருந்து வங்க தேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தப் போக்குவரத்தின் மூலம் மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் ரூ.23,15,962 வருவாய் ஈட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com