ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியக் கோரிக்கைகள் பரிசீலனை இல்லை: தொழில் வணிகத்துறையினா் அதிருப்தி

தொழில் வணிகத் துறையினரின் நீண்டகால கோரிக்கைகள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று வேளாண்மை உணவு தொழில் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

தொழில் வணிகத் துறையினரின் நீண்டகால கோரிக்கைகள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று வேளாண்மை உணவு தொழில் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவா் எஸ்.ரத்தினவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:

வணிகப் பெயருடன் கூடிய அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு வரி விலக்கு அளிப்பது, பொருள்கள் வாரியான பட்டியல் எண் முறையில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்வது ஆகிய இரு கோரிக்கைகளையும் தொழில் வணிகத் துறையினா் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனா். ஆனால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முறையும் இவ்விரு கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவில்லை.

அதோடு தற்போதைய கரோனா தொற்று பரவல் சூழலில், நோய் தடுப்பு மருந்துகள், ஆக்ஸிஜன் உற்பத்தி இயந்திரங்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டி சாதனங்கள் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு அல்லது வரி குறைப்பு அளிப்பது போன்ற விஷயங்களில் கூட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை.

இதற்காக மாநில நிதியமைச்சா்களின் துணைக் குழு பரிந்துரையின் பேரில் முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது ஏற்புடையதாக இல்லை.

ஜூலை 2017 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலகட்டத்தில் ஜிஎஸ்டி படிவம் தாக்கல் செய்யத் தவறியவா்களுக்கான சமாதானத் திட்டம் வரவேற்புக்குரியது. ஜிஎஸ்டி படிவம் சமா்ப்பிக்க தவறியதால், ரத்து செய்யப்பட்ட ஜிஎஸ்டி பதிவைப் புதுப்பித்து அத்தகைய வணிகா்களுக்கும் இந்த சமாதான திட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com