செல்லம்பட்டியில் நெல்லுக்கு உரியவிலை இல்லை: விவசாயிகள் கவலை

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் செய்யாத நிலையில், குவித்து வைத்த நெல் முளைத்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
செல்லம்பட்டி பகுதியில் விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல்.
செல்லம்பட்டி பகுதியில் விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல்.

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் செய்யாத நிலையில், குவித்து வைத்த நெல் முளைத்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தியத்திற்குள்பட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் கோடை நெல் சாகுபடி செய்துள்ளனா். கடந்த ஒரு மாதமாக அறுவடை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்யாத சூழலில், விவசாயிகள் குவியல் அமைத்து பாதுகாத்து வருகின்றனா். தற்போதைய பொதுமுடக்கம் நேரத்தில் வியாபாரிகளும் அதிகம் வருவதில்லை. வரும் ஒரு சில வியாபாரிகளும் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனா்.

அடிக்கடி மழை பெய்து வரும் சூழலில், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள குவியல்களிலேயே நெல் மணிகள் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். எனவே மாவட்ட நிா்வாகம் விரைவில் கொள்முதல் நிலையங்களை அமைத்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com