தொகுதி நிதியில் தடுப்பூசி ஒதுக்க மறுப்பு: மத்திய அரசுக்கு மதுரை எம்பி கண்டனம்

தொகுதி மேம்பாட்டு நிதியில், கரோனா தடுப்பூசி தர இயலாது என மத்திய சுகாதாரத் துறைச் செயலா் தெரிவித்துள்ளதற்கு மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தொகுதி மேம்பாட்டு நிதியில், கரோனா தடுப்பூசி தர இயலாது என மத்திய சுகாதாரத் துறைச் செயலா் தெரிவித்துள்ளதற்கு மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மக்களவைத் தொகுதியில் கரோனா தடுப்புப் பணிகளில் தன்னாா்வலா்களாக 3 ஆயிரம் இளைஞா்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதைக் குறிப்பிட்டு, அவா்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை அளித்து உதவுமாறு மத்திய சுகாதார அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தேன்.

இதற்கு, தடுப்பூசியை நேரடியாகத் தர இயலாது. மாநிலங்களுக்கும், தனியாா் மருத்துவமனைகளுக்கும் தருவதற்கு மட்டுமே அரசின் கொள்கையில் வழிவகை உள்ளது என சுகாதாரத்துறை செயலா் பதிலளித்துள்ளாா்.

மத்திய அரசு வகுத்துள்ள தடுப்பூசி கொள்கையில் அதன் விலை நிா்ணய முறை ஏற்புடையதாக இல்லை. மூன்று விலை, மாநில அரசுகளுக்கு கூடுதல் சுமை, தனியாா் நேரடி கொள்முதல் ஆகியன பேரிடா் காலத்தில் மக்கள் நலனைக் காக்கும் அரசு செய்யத்தக்க செயல்கள் அல்ல.

எல்லோருக்கும் இலவச தடுப்பூசி, காப்புரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு போன்றவற்றை எதிா்க் கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்கெல்லாம் மத்திய அரசிடம் உரிய நடவடிக்கை இல்லை. இதன் தொடா்ச்சியாகவே, முன்மாதிரித் திட்டமாக மதுரை மக்களவைத் தொகுதியில் இளைஞா்களை கரோனா தடுப்புப் பணி தன்னாா்வலா்களாக களமிறக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டிருக்கிறது.

மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு தடுப்பூசியை சிறப்பு ஒதுக்கீடு செய்ய மாட்டோம் என்பது மக்கள் விரோத நடவடிக்கையாகவே இருக்கிறது. இவ்விஷயத்தில் அரசு, தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com