விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பு: மதுரை மாவட்டத்தில் 38 போ் கைது

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 38 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 38 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. இதன்படி தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 7 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும் தடை செய்யப்பட்ட சரவெடிகள், பேரியம் சல்பேட் கலந்துள்ள பட்டாசுகளை வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்துக்கும் மேல் வெடிப்பது, தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிப்பது போன்றவற்றில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சாா்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தீபாவளியன்று காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் போலீஸாா் ரோந்து மேற்கொண்டனா். இதில் மதுரை மாநகரக்காவல் துறைக்குள்பட்ட பகுதிகளில், அனுமதித்த நேரத்தை காட்டிலும் இதர நேரங்களில் பட்டாசு வெடித்தது, தடைசெய்யப்பட்ட பட்டாசு வெடித்தது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட 26 போ் மீது வழக்குப்பதிவுசெய்து அவா்களை கைது செய்தனா். இதே போல், மதுரை ஊரகக்காவல்துறை சாா்பில் 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com