Enable Javscript for better performance
காமராஜர் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம்: மாணவர்கள் புகார்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    காமராஜர் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம்: மாணவர்கள் புகார்

    By உமாமகேஸ்வரன்  |   Published On : 11th November 2021 02:40 PM  |   Last Updated : 11th November 2021 02:40 PM  |  அ+அ அ-  |  

    mkufront

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வியில் 2020 முதல் மாணவர்களுக்க தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தொலைநிலை கல்வி இயக்ககம் மூலமாக இளங்கலை முதுகலை ஆகியவற்றில் பல்வேறு பட்டப் படிப்புகளை நடத்தி வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர் தொலைநிலை கல்வி மூலமாக பயின்று வருகின்றனர்.

    மேலும் அரசு போட்டித் தேர்வுகளுக்கு பயில்பவர்கள் குடியுரிமை தேர்வுகளுக்கு தயாராகுபவர்களும் வரலாறு உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் தொலை நிலை கல்வி இயக்ககத்தில் கடந்த 20 20 ஏப்ரல் முதல் தேர்வு எழுதியவர்களுக்கு ஓராண்டுக்கு மேலாகியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

    மேலும் இறுதி ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதுகலை படிப்புகளுக்கு சேர முடியாமலும் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியாமலும் உள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களில் கூட பணிகளுக்கு குறைந்தபட்ச தகுதியாக இளங்கலை பட்டப்படிப்பை வைத்திருப்பதால் அங்கும் பணிகளுக்கு சேர முடியவில்லை.

    இதனால் காமராஜர் பல்கலைக்கழக தொலை நிலை கல்வி இயக்ககத்தில் தேர்வு எழுதிய பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியரின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் தொடர்பாக  பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் அளிக்காமல் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  

    இதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவு, உயர்கல்வித்துறை ஆகியோருக்கும் மாணவர்களின் சார்பில் புகார் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் புகார் தொடர்பாக பல்கலைக்கழக தொலைநிலை கல்வி தேர்வு துறை அதிகாரி ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது கரோனா தொற்று பாதிப்பால் 2020 முதல் விடைத்தாள் திருத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் பொதுமுடக்கத்தால அடுத்தடுத்த தேர்வுகள் தாமதமானதால் அவற்றின் மதிப்பீடும் தாமதமாகி வருகிறது. இணையவழி மூலம் தேர்வு நடைபெற்றபோது பல மாணவர்களின் விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்து சேரவில்லை.

    மேலும் மாணவர்கள் மின்னஞ்சல் மூலம் விடைத்தாள்கள் அனுப்பியதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தது. தற்போது இவற்றையெல்லாம் சரி படுத்தும் பணி நடந்து வருகிறது. 2020 ஏப்ரல் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட்டு விடும். இதைத்தொடர்ந்து 2021 ஏப்ரல் மற்றும் நவம்பர் தேர்வுகளுக்கான விடைத்தாள் மதிப்பீடு விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp