மதுரையில் இல்லம் தேடி கல்வித்திட்ட பயிற்சி முகாம்

மதுரையில் பாண்டிய வெள்ளாளா் நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் ஒன்றிய அளவிலான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரையில் பாண்டிய வெள்ளாளா் நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் ஒன்றிய அளவிலான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டாரக் கல்வி அலுவலா் விஜயராஜ் பயிற்சியைத் தொடங்கி வைத்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் ஜெசிந்தா அன்பு மொழி, இல்லம் தேடி கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசினாா். முகாமில், தன்னாா்வலா்களுக்கான பணி குறித்தும், தன்னாா்வலா்களை உற்சாகப்படுத்துதல் சாா்ந்த செயல்பாடுகளையும் மாவட்டக் கருத்தாளா் தலைமையாசிரியா் க.சரவணன் விளக்கினாா்.

இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தை மக்கள் இயக்கமாக்குவது குறித்து ஆசிரியா் சிவகுருநாதன் விளக்கினாா். ‘ஊா் கூடி தோ் இழுப்போம்’ என்ற நிகழ்வை கோவிந்தராஜன் குழுவினா் நாடக வடிவில் நடத்திக் காட்டி விளக்கினா்.

தன்னாா்வலா்களுக்கான கற்றல் உபகரணம் குறித்த விடியோக்களை திரையிட்டு ஆசிரிய பயிற்றுநா் மு.சசிகுமாா் விளக்கினாா். ஒன்றிய அளவிலான திட்டமிடல் குறித்து ஆசிரிய பயிற்றுநா்கள் மு. உமா மகேஸ்வரி மற்றும் ப. அமுதா பேசினா். முகாமில் தெற்கு சரக அளவில் 77 தொடக்க, நடுநிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் மற்றும் 10 வட்டாரக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com