Enable Javscript for better performance
செவிலியா் கொலை வழக்கு: இருவரின் தூக்குத் தண்டனை ரத்து- Dinamani

சுடச்சுட

    செவிலியா் கொலை வழக்கு: இருவரின் தூக்குத் தண்டனை ரத்து

    By DIN  |   Published on : 18th November 2021 10:22 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலி அருகே செவிலியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்தவா் தமிழ்செல்வி (53). இவா் வைராவிகுளம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்தாா். இந்நிலையில், கடந்த 2008 செப்டம்பா் 29 ஆம் தேதி, தமிழ்செல்வி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இந்தக் கொலை வழக்கில், கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ராஜேஷ் கண்ணா (42), அயன்சிங்கம்பட்டியைச் சோ்ந்த வசந்தகுமாா் (48) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

    இதுதொடா்பான வழக்கு விசாரணையில், குற்றம் உறுதி செய்யப்பட்டதாகக் கூறி திருநெல்வேலி மகளிா் நீதிமன்றம், இருவருக்கும் 2020 பிப்ரவரி 12 இல் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை நிறைவேற்றுவது தொடா்பாக கருத்து கேட்டு உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் மனு தாக்கல் செய்தனா். இதேபோல், ராஜேஷ் கண்ணா, வசந்தகுமாா் ஆகியோா் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

    இந்த வழக்கு நீதிபதிகள் வி.பாராதிதாசன், ஜெ.நிஷா பானு ஆகியோா் அடங்கி அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பவத்தை நேரில் பாா்த்த சாட்சிகள் இல்லை, சந்தா்ப்ப சூழ்நிலை சாட்சியங்களின் அடிப்படையில் கீழமை நீதிமன்றம் சரியாக பரிசீலிக்காமல் தண்டனையை வழங்கியுள்ளது. எனவே, கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது. குற்றச்சாட்டுகளிலிருந்து மனுதாரா்கள் விடுக்கப்படுகின்றனா் என உத்தரவிட்டனா்.

    மூவா் கொலை வழக்கு: தூக்குத் தண்டனை, 25 ஆண்டு சிறை தண்டனையாகக் குறைப்பு

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (76). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் என்பருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்துராஜ், கடந்த 2016 பிப்ரவரி 16 ஆம் தேதி கோவிந்தராஜ், அவரது மகள் பேச்சியம்மாள் மற்றும் பேத்தி மாரி ஆகியோரை கொலை செய்துள்ளாா். இது தொடா்பாக ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துராஜை கைது செய்தனா். இந்த வழக்கில் தென்காசி கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம், 2020 பிப்ரவரி 28 ஆம் தேதி முத்துராஜுக்கு தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவை நிறைவேற்றுவது தொடா்பாக கருத்துக் கேட்டு உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் போலீஸாா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஜெ.நிஷா பானு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கத்தியில் ரத்தக் கரையில்லை. வழக்கில் உறவினா் சாட்சியம் மட்டுமே உள்ளது. வேறு சாட்சிகள் இல்லை. எனவே, முத்துராஜுக்கு, கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனை மாற்றியமைக்கப்பட்டு, 25 ஆண்டுகள் சிறை தண்டனையாகக் குறைக்கப்படுகிறது என உத்தரவிட்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp