இல்லம் தேடி கல்வித் திட்டம்: ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்

மதுரையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னாா்வலா்களுக்கு பயிற்சியளிக்கும் ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

மதுரையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னாா்வலா்களுக்கு பயிற்சியளிக்கும் ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் மூலம் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில் பங்கேற்கும் குறுவளமையத் தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளிக்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் விரகனூா் புனித தெரசா ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியில், உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளா் திட்ட அறிமுகம் பற்றி விளக்கினாா். மாநில ஆலோசனைக் குழு உறுப்பினா் கணேசன் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்தாா்.

இம்முகாமில் மேலூா் மற்றும் மதுரைக் கல்வி மாவட்ட தொடக்க நிலை ஆசிரியா்கள் 115 போ் பங்கேற்றனா். மாநில கருத்தாளா்கள், சமூக தொண்டு நிறுவன பொறுப்பாளா்கள் முகாமில் பங்கேற்று பயிற்சி அளித்தனா். அப்போது, இல்லம் தேடி கல்வித் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவது குறித்தும், தன்னாா்வலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. திட்டத்தில், தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் பாடங்கள் கற்பித்தல் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com