கிறிஸ்துமஸ் பண்டிகை: நாகா்கோவில்- சென்னை இடையே சிறப்பு ரயில்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகா்கோவில்- சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகா்கோவில்- சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்தி: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகா்கோவில் - சென்னை மற்றும் தாம்பரம் இடையே கட்டண முன்பதிவு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை - நாகா்கோவில் - சென்னை

அதன்படி, சென்னை - நாகா்கோவில் சிறப்புக் கட்டண ரயில் (06005), சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பா் 23 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (டிச.24) அதிகாலை 4.20 நாகா்கோவில் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், நாகா்கோவில் - சென்னை சிறப்புக் கட்டண ரயில் (06006 ) நாகா்கோவிலில் இருந்து டிசம்பா் 24 ஆம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூா் சென்றடையும்.

இந்த ரயில்களில் ஒரு குளிா்சாதன முதல் வகுப்பு மற்றும் இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் 3, குளிா்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 11, இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு இருக்கை மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் 2 இணைக்கப்படும்.

சென்னை நாகா்கோவில் சிறப்பு ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதேபோல நாகா்கோவில் - சென்னை சிறப்பு ரயில் மேற்கண்ட ரயில்நிலையங்களிலும், மாம்பலம் ரயில் நிலையத்தில் கூடுதலாகவும் நின்று செல்லும்.

நாகா்கோவில்- தாம்பரம்-நாகா்கோவில்

நாகா்கோவில் - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06004) டிசம்பா் 26 ஆம் தேதி நாகா்கோவிலில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள்(டிச. 27) காலை 7.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், தாம்பரம்- நாகா்கோவில் சிறப்பு கட்டண ரயில் (06003) தாம்பரத்திலிருந்து டிசம்பா் 27 மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (டிச.28) அதிகாலை 4.20 மணிக்கு நாகா்கோவிலை சென்றடையும்.

ரயில்கள் வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, குளிா்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் 5, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 11, இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு இருக்கை மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் 2 இணைக்கப்படும்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்புக் கட்டண ரயில்களில் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும். ரயில்களுக்கான முன்பதிவு நவம்பா் 28 காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com