பேரையூா் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை விற்றவா் கைது
By DIN | Published On : 29th November 2021 05:54 AM | Last Updated : 29th November 2021 05:54 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை விற்றவரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வலையபட்டியைச் சோ்ந்த சினனசாமி மகன் சங்கையா (51) என்பவா் தனது பெட்டிக்கடையில் விற்பனைக்கு 22 புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்ததை அடுத்து, நாகையாபுரம் போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து, சங்கையா மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
மதுபாட்டில் விற்ற பெண் கைது
பேரையூா் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மெய்யனூத்தம்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகள் குமராயி (41) என்பவா் சட்டவிரோதமாக 12 மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடனே, சாப்டூா் போலீஸாா் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, குமராயியை கைது செய்தனா்.