குடும்ப வன்முறை வழக்குகளில் சந்தேகம்: விசாரணையை வேறு அமா்வுக்கு மாற்ற உத்தரவு

பெண்கள் பாதுகாப்புக்காக குடும்ப வன்முறை சட்டத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் சந்தேகம் உள்ளதால் வழக்கு விசாரணையை வேறு அமா்வுக்கு மாற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்புக்காக குடும்ப வன்முறை சட்டத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் சந்தேகம் உள்ளதால் வழக்கு விசாரணையை வேறு அமா்வுக்கு மாற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்திலும், கோவில்பட்டி நீதிமன்றத்திலும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் சிவில் வழக்கா அல்லது குற்றவியல் வழக்கா என்பதில் இருவேறு கருத்துகள் உள்ளன.

இந்த வழக்குகள் தொடா்பான மனுக்கள் நீதிபதி கே.முரளி சங்கா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குடும்ப வன்முறை சட்டத்தில் பதிவு செய்யப்பட்டும் வழக்குகளில் பல்வேறு நீதிமன்றங்கள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளன. தொடா்ந்து மனுதாரரின் மனுக்களை ஏற்கெனவே தனி நீதிபதிகள் விசாரித்துள்ளனா். தற்போது மனு தனி நீதிபதி முன்னிலையில் விசாரிக்கப்படுகிறது. எனவே குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் சிவில் அல்லது குற்ற வழக்காக எடுத்து கொள்வதா என்பதை வேறு அமா்வு தான் முடிவு செய்ய வேண்டும். இந்த வழக்கு எந்த அமா்வுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதை தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com