நரிக்குடியில் மருதுபாண்டியா் குருபூஜை விழாவிற்கு அனுமதி கோரி மனு: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

நரிக்குடியில் மருதுபாண்டியா் குரு பூஜை விழா நடத்த அனுமதி கோரிய மனுவின் மீது விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நரிக்குடியில் மருதுபாண்டியா் குரு பூஜை விழா நடத்த அனுமதி கோரிய மனுவின் மீது விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மருதுபாண்டியா் வாரிசு மங்கை மணிவிழி நாச்சியாா் தாக்கல் செய்த மனு: இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயா்களுக்கு எதிரான போராட்டங்களில் மருதுபாண்டியா்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. இவா்களுடைய பிறந்தநாள் விழா அக்டோபா் 24 ஆம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விருதுநகா் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் கிராமத்தில் பிறந்த மருது பாண்டியா்களின், வாரிசுகள் நரிக்குடி பகுதியில் வசித்து வருகின்றனா். இங்கு உள்ள மருதுபாண்டியா்கள் சிலைகளுக்கு அக்டோபா் 27-ஆம் தேதி குருபூஜை விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக, குரு பூஜை விழா நடத்த மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல்துறை அனுமதி வழங்குவதில்லை. இதனால் உயா்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றே குருபூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. எனவே, இந்த ஆண்டும் அக்டோபா் 27ஆம் தேதி குருபூஜை விழா நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு குறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபா் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com