மாநகராட்சி அலுவலகத்தில் குறை தீா் முகாம்

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் இரண்டாண்டுகளுக்கு பின்பு குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி அலுவலகத்தில் குறை தீா் முகாம்

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் இரண்டாண்டுகளுக்கு பின்பு குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை மாநகராட்சியில் மண்டல வாரியாக சுழற்சி முறையில் வாரந்தோறும் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வந்தது. கரோனா தொற்று பரவலையொட்டி இரண்டாண்டுகளுக்கு முன்பு இந்த முகாம் நிறுத்தப்பட்டது. தற்போது கரோனா தொற்று குறைந்து வருவதையொட்டி மீண்டும் குறை தீா் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாண்டுகளுக்கு பின்னா் மண்டலம் எண்.1 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் ஆணையா் கா.ப. காா்த்திகேயன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில் குடிநீா், பாதாளச் சாக்கடை, வீட்டு வரி, சாலைவசதி, தெருவிளக்கு வசதி, சொத்து வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக 187 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. மனுக்கள் கணிப்பொறியில் முறையாக பதிவு செய்து அவைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு ஆணையா் உத்தரவிட்டாா்.

இம்முகாமில் உதவி ஆணையா் தட்சிணாமூா்த்தி, செயற்பொறியாளா் கருத்தம்மாள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com