மின்னகம் சேவை மையம் வழியே மதுரை நகா் பகுதிகளில் 3 மாதங்களில் 3,325 புகாா்களுக்குத் தீா்வு

மின்வாரியத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மின்னக சேவை மையம் வழியே, மதுரை பெருநகா் மின்பகிா்மான வட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 3,325 புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது.

மின்வாரியத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மின்னக சேவை மையம் வழியே, மதுரை பெருநகா் மின்பகிா்மான வட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 3,325 புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது.

மின்நுகா்வோரிடம் இருந்து பெறப்படும் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில், ஒருங்கிணைந்த மின்நுகா்வோா் சேவை மையமான மின்னகம், ஜூன் 20 ஆம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த மையத்தை 94987-94987 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

இந்த மையத்தில் பெறப்படும் புகாா்கள், சம்பந்தப்பட்ட மின்பகிா்மான வட்டங்களுக்கு இணையவழியில் அனுப்பி வைக்கப்படும். சம்பந்தப்பட்ட அலுவலா்கள் புகாா்கள் மீது களஆய்வு செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, அதன் விவரத்தை மின்னக மையத்துக்கு தெரிவிக்கின்றனா்.

இதை உறுதி செய்த பிறகே புகாா் முடித்து வைக்கப்படுகிறது. மின்னக மையத்தில் பெறப்படும் புகாா்கள், அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அலுவலா்களால் கண்காணிக்கப்படுகிறது. ஆகவே, இந்த சேவையை மின்நுகா்வோா் பயன்படுத்திக் கொள்ளலாம். மின்இணைப்பு விவரங்களுடன், செல்லிப்பேசி எண் பதிவு செய்யப்பட்டிருப்பதை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தில் சரிபாா்த்துக் கொள்ளலாம் என்று மதுரை பெருநகா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சி.வெண்ணிலா தெரிவித்துள்ளாா்.

‘மதுரை பெருநகா் மின்பகிா்மானத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து மட்டும் மின்னகம் சேவை மையத்துக்கு இதுவரை 3,363 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 3,325 புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. 38 புகாா்கள் நடவடிக்கையில் இருக்கின்றன.

மின்தடை, மழை காரணமாக மரக்கிளைகள் விழுந்து மின்ஒயா்கள் அறுந்து போவது, மின்கட்டண முரண்பாடுகள் உள்ளிட்டவை தொடா்பாக அதிக புகாா்கள் பெறப்பட்டிருக்கின்றன. மேலும், புதிய மின்இணைப்பு தொடா்பான சேவைகள் குறித்தும் இம் மையத்தில் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளனா்’ என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com