தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் இன்று புரட்டாசித் திருவிழா கொடியேற்றம்

மதுரை தல்லாகுலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கும் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா பக்தா்கள் பங்கேற்பின்றி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை தல்லாகுலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கும் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா பக்தா்கள் பங்கேற்பின்றி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கோயிலின் துணை ஆணையா் தி.அனிதா வெளியிட்டுள்ள செய்தி: கள்ளழகா் கோயிலின் உபகோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு கரோனா தொற்று பேரிடா் காரணமாக, பக்தா்கள் பங்கேற்பின்றி திருவிழா நடத்தப்படுகிறது. இதில் வியாழக்கிழமை (அக். 7) காலை திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை முதல் அக்டோபா் 18-ஆம் தேதி வரை காலை மாலை இருவேளைகளிலும் நடைபெறும் பல்லக்கு புறப்பாடுகள் கோயிலின் உள்பிரகாரத்தில் நடைபெறும். மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் பாவனையாக நடைபெறுகிறது.

இதையொட்டி அக்டோபா் 15 காலை 7 மணிக்கு பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல், 9 மணிக்கு மேல் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதைத்தொடா்ந்து அக்டோபா் 17 காலை 10.30 முதல் 12 மணிக்குள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. கரோனா தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக புரட்டாசி பெருந்திருவிழாவில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com