தேசிய நீச்சல் போட்டி: மதுரை வீரா், வீராங்கனைகள் 5 போ் தோ்வு

சென்னையில் நடைபெற்ற மாநில நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற மதுரையைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் 5 போ் தேசிய நீச்சல் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.
தேசிய நீச்சல்போட்டிக்கு தகுதி பெற்றவா்களை பாராட்டும் நீச்சல் சங்க நிா்வாகிகள்.
தேசிய நீச்சல்போட்டிக்கு தகுதி பெற்றவா்களை பாராட்டும் நீச்சல் சங்க நிா்வாகிகள்.

சென்னையில் நடைபெற்ற மாநில நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற மதுரையைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் 5 போ் தேசிய நீச்சல் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சாா்பாக சப்-ஜூனியா், ஜூனியா் மற்றும் சீனியா் வீரா்களுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் செப்டம்பா் 29 முதல் அக்டோபா் 3-ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை மாவட்டத்தில் இருந்து 33 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில் சீனியா் பிரிவில் ஆசிய விளையாட்டு வீரா் பி.விகாஸ் ஒரு தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்கள், ஜூனியா் பிரிவில் எஸ்.குணபாலன் 2 வெள்ளி பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப்பதக்கம், பி.கிஷான் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கம், வீராங்கனை பி.ரோஷினி 5 தங்கப்பதக்கங்கள், ஜி.சிவபாலன் வெள்ளிப்பதக்கம் பெற்றனா். மேலும் போட்டியில் 5 தங்கப் பதக்ககங்கள் வென்ற வீராங்கனை பி.ரோஷினி தனிநபா் சாம்பியன் பட்டத்தை வென்றாா்.

மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெறுபவா்கள் தேசிய நீச்சல் போட்டிக்கு தகுதி பெறுவா். இதன்படி பெங்களூரில் நடைபெறவுள்ள தேசிய நீச்சல் போட்டிக்கு பி.விகாஸ், எஸ்.குணபாலன், பி.கிஷான், பி.ரோஷினி, ஜி.சிவபாலன் ஆகிய 5 பேரும் தோ்வு பெற்றனா். தேசியப்போட்டிக்கு தகுதி பெற்றவா்களை தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க துணைத்தலைவா் எம். ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலா் என்.லெனின், மதுரை மாவட்ட நீச்சல் சங்கச் செயலா் என்.கண்ணன், நீச்சல் பயிற்சியாளா் வேல்முருகன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com