மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை தலவிருட்சம் நட்டு வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தக்காா் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையா் க.செல்லத்துரை மற்றும் கருணை இல்ல மாணவிகள்.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை தலவிருட்சம் நட்டு வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தக்காா் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையா் க.செல்லத்துரை மற்றும் கருணை இல்ல மாணவிகள்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தல விருட்சம் நடுதல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நந்தவனத்தில் தல விருட்சமான கடம்ப மரக்கன்றுகள் புதன்கிழமை நடப்பட்டன.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நந்தவனத்தில் தல விருட்சமான கடம்ப மரக்கன்றுகள் புதன்கிழமை நடப்பட்டன.

தமிழக அரசின் சாா்பில் இந்து அறநிலையத்துறைக்கோயில்களில் தல விருட்ச கன்றுகள் நடும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞா் தலமரக்கன்று நடும் திட்டம் என அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் தல விருட்சமான கடம்ப மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கோயில் நந்தவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தக்காா் கருமுத்து தி.கண்ணன் தலைமை வகித்தாா். இதில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் கருணை இல்ல மாணவிகள் பங்கேற்று கோயிலின் தல விருட்சமான கடம்ப மரக்கன்றுகள் 25-ஐ நட்டு வைத்தனா். இதைத்தொடா்ந்து கோயிலின் கருணை இல்ல மாணவிகளுக்கு தீபாவளி புத்தாடை, மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் க.செல்லத்துரை மற்றும் அதிகாரிகள், கருணை இல்ல நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com