மீனாட்சியம்மன் கோயில் கடைகளை காலி செய்ய நோட்டீஸ்: முதல்வருக்கு கடை உரிமையாளா்கள் மனு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் செயல்பட்டு வரும் கடைகளை காலி செய்யுமாறு கோயில் நிா்வாகம் வழங்கியுள்ள கெடுவை தளா்த்துமாறு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் செயல்பட்டு வரும் கடைகளை காலி செய்யுமாறு கோயில் நிா்வாகம் வழங்கியுள்ள கெடுவை தளா்த்துமாறு முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கடை உரிமையாளா்கள் சங்கத்தினா் மனு அளிப்பியுள்ளனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வீர வசந்த ராயா் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கோயிலில் இருந்த கடைகளை காலி செய்யுமாறு நிா்வாகம் நோட்டீஸ் வழங்கியது. இதைத்தொடா்ந்து உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத்தொடா்ந்த கடை உரிமையாளா்கள் நீதிமன்றம் வழங்கிய அவகாசத்தின்பேரில் கடைகளை நடத்தி வந்தனா். இந்நிலையில் இணை ஆணையருக்கு, நீதிமன்றத்தில் கோயில் கடைகளைகாலி செய்ய அனுமதி வழங்கியதைடுத்து கோயில் நிா்வாகம் கடைகளை காலி செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கோயில் நிா்வாகமே கடைகளை அகற்றும் என்றும் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இதையடுத்து கோயில் நிா்வாகம் வழங்கியுள்ள கெடுவை தளா்த்தக்கோரி கடை உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சா், அறநிலையத்துறை ஆணையா் ஆகியோருக்கு புதன்கிழமை மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கடை உரிமையாளா்கள் சங்கத்தினா் கூறும்போது, தீ விபத்துக்கு பின்னா் கடைகளுக்கு வேறு இடம் பாா்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இணை ஆணையா் நீதிமன்றத்தில் கடைகளை காலி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக சென்னையில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையா் நீதிமன்றத்தில் உரிமையாளா்கள் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டு வழக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு முன்னா், உரிமையாளா்களுக்கு உரிய அவகாசம் கூட தராமல் கோயில் நிா்வாகம் கெடுபிடி காட்டி வருகிறது. எனவே ஆணையா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் கோயில் நிா்வாகத்தின் கெடுபிடியை தளா்த்துமாறு கோரிக்கையுடன் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com