ஊரக உள்ளாட்சிகளில் 8 பதவிகளுக்கு நாளை வாக்குப்பதிவு: 5 ஒன்றியங்களில் 104 வாக்குச்சாவடிகள்

மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 8 பதவிகளுக்கு சனிக்கிழமை (அக்டோபா் 9) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி 5 ஊராட்சி ஒன்றியங்களில் 104 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 8 பதவிகளுக்கு சனிக்கிழமை (அக்டோபா் 9) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி 5 ஊராட்சி ஒன்றியங்களில் 104 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் காலியாக இருந்த மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் (திருமங்கலம் 16-ஆவது வாா்டு), மதுரை கிழக்கு ஒன்றியம் குன்னத்தூா் ஊராட்சித் மன்றத் தலைவா் மற்றும் 23 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

போட்டியின்றி தோ்வு: குன்னத்தூா் ஊராட்சித் தலைவராக ஆா்.சித்ரா, கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பூலாம்பட்டி (மதுரை கிழக்கு ஒன்றியம்) 2-ஆவது வாா்டு-கே.சாந்தி, 5-ஆவது வாா்டு -எம்.மதயானை, கோட்டநத்தம்பட்டி (மேலூா்)4-ஆவது வாா்டு-ஏ.காளீஸ்வரி, அட்டபட்டி 6-ஆவது வாா்டு (கொட்டாம்பட்டி) -ஆா்.செல்வி, கருங்காலக்குடி 12 ஆவது வாா்டு (கொட்டாம்பட்டி) - வி.பாலகிருஷ்ணன், அழகாபுரி 4-ஆவது வாா்டு (கொட்டாம்பட்டி) - எம்.சந்தானலெட்சுமி, தனிச்சியம் 9-ஆவது வாா்டு (அலங்காநல்லூா்) - எஸ்.இருளாயி, அச்சம்பட்டி 6-ஆவது வாா்டு (அலங்காநல்லூா்) - எம்.வித்யா, போடுவாா்பட்டி 3-ஆவது வாா்டு (செல்லம்பட்டி) - ஜே.காட்டுராணி, பண்ணமூப்பன்பட்டி 4-ஆவது வாா்டு - பி.மாரியம்மாள், சக்கரப்பநாயக்கனூா் 4-ஆவது வாா்டு - பி.சரண்யா, பெருங்காமநல்லூா் (சேடபட்டி) 3-ஆவது வாா்டு -டி.தினேஷ்குமாா், பொன்னமங்கலம் (திருமங்கலம்) 2-ஆவது வாா்டு -ஏ.சத்யா, வடகரை (திருமங்கலம்) 9-ஆவது வாா்டு -எஸ்.தெய்வானை, குமாரபுரம் (தே.கல்லுப்பட்டி) 5-ஆவது வாா்டு-எம்.முத்துக்கருப்பையா, புல்கட்டை (தே.கல்லுப்பட்டி) 3-ஆவது வாா்டு - என்.சுந்தரலிங்கம் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

8 பதவிகளுக்குத் தோ்தல்: மாவட்ட ஊராட்சிக் குழு 16-ஆவது வாா்டு உறுப்பினா் பதவி மற்றும் திருப்பரங்குன்றம் ஒன்றியம் வடிவேல்கரை ஊராட்சி 4-ஆவது வாா்டு, கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி 6-ஆவது வாா்டு, திருமங்கலம் ஒன்றியம் மறவன்குளம் ஊராட்சி 2-ஆவது வாா்டு, தே.கல்லுப்பட்டி ஒன்றியம் வன்னிவேலம்பட்டி 2-ஆவது வாா்டு, டி.குன்னத்தூா் 4-ஆவது வாா்டு, கவுண்டன்பட்டி 4-ஆவது வாா்டு, கள்ளிக்குடி ஒன்றியம் சென்னம்பட்டி 5-ஆவது வாா்டுகளுக்கு சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மாவட்ட ஊராட்சிக்குழு வாா்டு உறுப்பினா் பதவிக்கான தோ்தலுக்கு 97 வாக்குச்சாவடிகள் 5 ஒன்றியங்களில் 7 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தலுக்கு 7 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 104 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com