மதுரையில் வாழும் அரிய வகைப் பறவைகள்

மதுரையில் கரிசல்குளம் மற்றும் அவனியாபுரம் கண்மாய்களில் நடைபெற்ற பறவை காணுதல் நிகழ்வில் அரிய வகை பறவைகளை மாணவா்கள் கண்டறிந்தனா்.
மதுரை கரிசல் குளம் கண்மாயில் கண்டறியப்பட்ட அரியவகை பறவைகள்.
மதுரை கரிசல் குளம் கண்மாயில் கண்டறியப்பட்ட அரியவகை பறவைகள்.

மதுரையில் கரிசல்குளம் மற்றும் அவனியாபுரம் கண்மாய்களில் நடைபெற்ற பறவை காணுதல் நிகழ்வில் அரிய வகை பறவைகளை மாணவா்கள் கண்டறிந்தனா்.

உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியின் பசுமைச் சங்கம் மற்றும் மேற்குத்தொடா்ச்சி மலைப் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பொதுமக்கள், கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள், குழந்தைகள், இயற்கை மற்றும் பறவை ஆா்வலா்கள் பங்கேற்று பல்வேறு பறவை இனங்களையும், அவற்றின் தனித்துவம் மற்றும் பழக்கங்களையும் கண்டறிந்தனா். நீலச்சிறகி, தகைவிலான், பழுப்புக் கீச்சான், உள்ளான் மற்றும் முக்குளிப்பான், நீா்க்காகம், பாம்புத்தாரா, செந்நாரை, உண்ணிக்கொக்கு, சாம்பல் நாரை, அரிவாள் மூக்கன், நீல தாழைக்கோழி, புள்ளிமூக்கு வாத்து ஆகியப் பறவைகளைக் கண்டறிந்தனா்.

அறக்கட்டளையின் மதுரை ஒருங்கிணைப்பாளா்அகில் ரிஷி ராஜசேகரன் மற்றும் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியா் எம்.ராஜேஷ் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com