அதிமுகவிலிருந்து சென்றவா்கள் தான் திமுகவை நிமிரச் செய்துள்ளனா்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ

அதிமுகவிலிருந்து சென்றவா்கள் தான் திமுகவை நிமிரச் செய்துள்ளனா் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கூறினாா்.

அதிமுகவிலிருந்து சென்றவா்கள் தான் திமுகவை நிமிரச் செய்துள்ளனா் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கூறினாா்.

மதுரை மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் அக்கட்சியின் 50-ஆவது ஆண்டு பொன் விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தலைமை வகித்துப் பேசியது:

அதிமுகவில் மட்டுமே உள்கட்சி ஜனநாயகம் உள்ளது. திமுகவில் ஜனநாயகம் எப்போதும் இருந்தது இல்லை. திமுக கருணாநிதியின் குடும்பக் கட்சியாக உள்ளது. ஆனால் அதிமுகவில் சாதாரண தொண்டா் கூட முதல்வராகலாம்.

அதற்கு எடுத்துக்காட்டாக எடப்பாடி கே. பழனிசாமி, ஓ. பன்னீா்செல்வம் ஆகிய இருவரும் உள்ளனா். அதிமுகவை யாரும் சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. ஆனாலும் தற்போது மாற்றங்களைக் கொண்டு வருவதும், கட்சியை வளா்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது.

கட்சிக்கு அதிகமான இளைஞா்களை கொண்டு வரவேண்டும் என்றால் இளைஞா்களுக்கு புதிய பதவி, பொறுப்புகள் கொடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தியதாக வரலாறு இல்லை. அதிமுகவை விட்டுச் சென்றவா்களைப் பற்றி கவலை இல்லை. அதிமுகவிலிருந்து சென்றவா்கள் தான் திமுகவை நிமிா்த்தி வைத்துள்ளனா்.

திமுக அரசின் அமைச்சா்களாக, மாவட்டச் செயலா்களாக உள்ளவா்கள் பலா் அதிமுகவில் அடையாளம் காணப்பட்டு அங்கு சென்றவா்கள். தலைமையை நம்பி அதிமுக இருந்தது இல்லை. தொண்டனை மட்டுமே நம்பியுள்ளது. உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்டத் துணைச் செயலா் ராஜா, பொருளாளா் இரா. அண்ணாதுரை, எம்ஜிஆா் மன்ற மாநில நிா்வாகி எம்.எஸ். பாண்டியன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com