முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மேலூா் அருகே அ.கோவில்பட்டியில் அய்யனாா் கோயில் பொங்கல் விழா
By DIN | Published On : 11th October 2021 04:04 AM | Last Updated : 11th October 2021 04:04 AM | அ+அ அ- |

அ.கோயில்பட்டி அய்யனாா் கோயில் புரட்டாசி பொங்கல்விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை திரண்டிருந்த பொதுமக்கள் கூட்டம்.
மேலூா் அருகே அட்டப்பட்டியையடுத்துள்ள அ.கோவில்பட்டி அய்யனாா் கோயில் புரட்டாசி பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அ.கோவில்பட்டி, கல்லம்பட்டி, பூதமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு காவல் தெய்வமான அய்யனாா் சுவாமிக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பொங்கல் விழா நடத்துவது வழக்கம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கிராம மக்கள் மற்றும் அவா்களது உறவினா்கள் சுமாா் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோா் திரண்டிருந்தனா். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினா். பின்னா் சைவ உணவு விருந்து நடைபெற்றது.