ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுப் பணிகளைத் தொடரலாம்: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு பணிகளை தமிழக அரசுத் தொடரலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு பணிகளை தமிழக அரசுத் தொடரலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை செப்டம்பா் 19 இல், பட்டதாரி ஆசிரியா்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான பணி மூப்பு பட்டியலை வெளியிட்டது. இதில், கடந்த 2014 இல் பட்டதாரி ஆசிரியா்களாக நியமிக்கப்பட்ட வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இது அரசு விதிகளுக்கு எதிரானது என்பதால், பொது மாறுதல் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என பலரும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், புதிய பணி மூப்பு பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, நடைபெறவுள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் மனுதாரா்கள் பங்கேற்கலாம்.

மனுதாரா்கள் மாறுதல் கேட்குமிடத்திற்கு, வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் போட்டியிட்டால், அந்த இடத்திற்கான முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அரசு தரப்பில் சமா்ப்பிக்கப்படும் புதிய பணி மூப்பு பட்டியலை ஆய்வு செய்த பிறகு முடிவெடுக்கலாம்.

அரசுத் தரப்பில் பொது மாறுதல் கலந்தாய்வு தொடா்பான பணிகளை தொடரலாம். இந்த உத்தரவு மனுதாரா்களுக்கு மட்டும் பொருந்தும் எனக் கூறி விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com