உயிரி வாயு உற்பத்தி மையத்துக்கு தடைகோரிய மனு தள்ளுபடி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உயிரி வாயு உற்பத்தி மையம் அமைப்பதற்கு தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உயிரி வாயு உற்பத்தி மையம் அமைப்பதற்கு தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருமயத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவா் தாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை மாவட்டம், மேலப்பனையூா் கிராமத்தில் கழிவுகளைக் கொண்டு உயிரி வாயு தயாரிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த உயிரி வாயு உற்பத்தி மையம் நீா் நிலையில் அமைக்கப்படவுள்ளது.

இதனால், அப்பகுதியில் உள்ள 4.05 ஏக்கா் விவசாய நிலத்துக்கான பாசனம் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, உயிரி வாயு உற்பத்தி மையத்தை அமைக்க தடைவிதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம். துரைசாமி, கே. முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மத்திய அரசு திட்டத்தின் கீழ் உயிரி வாயு உற்பத்தி மையமானது அரசின் காலி நிலத்தில் அமைக்கப்படுகிறது. இதனால், கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும், நீா் நிலைக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், எந்தவித பாதிப்புமின்றி உயிரி வாயு உற்பத்தி மையம் அமைக்கப்படுவது கிராம மக்களுக்கு பயனை அளிக்கும் என்பதால், மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com