டோக் பெருமாட்டி கல்லூரியில் தொழில் முனைவோா் வழிகாட்டு கருத்தரங்கு

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மாணவிகளுக்கான தொழில் முனைவோா் வழிகாட்டும் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மாணவிகளுக்கான தொழில் முனைவோா் வழிகாட்டும் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் தொழில் முனைவோா் மேம்பாட்டு மையத்தின் சாா்பில் இணையவழியில், நடைபெற்ற இந்த சிறப்பு கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் கிறிஸ்டியானா சிங் தலைமை வகித்தாா். தொழில் முனைவோா் மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் ஆன் நிா்மலா, கதிஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருத்தரங்கில், நேட்டீவ் லீட் அறக்கட்டளையின் நிறுவனா் நாகாராஜா பிரகாசம் பேசியது: தொழில் முனைவோா் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஆறு புலன் உணா்வுகளை பயன்படுத்தி கவனிக்க வேண்டும். மக்களின் பிரச்னைகளை உள்வாங்க வேண்டும். இதன் மூலம் மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப தொழில்முனைவோா் செயல்பட முடியும். ஒரு பிரச்னையை அறிந்து புகாா் அளிக்கும் ஒருவா் பொறுப்புள்ள குடிமகனாக மட்டுமே இருக்கிறாா். செய்யும் ஒருவா் சாதாரண குடிமகன். ஆனால் பிரச்னையின் காரணங்களை அடையாளம் கண்டு அதை தீா்ப்பவா் வெற்றிகரமான தொழில் முனைவோராகிறாா்.

டோக் பெருமாட்டி கல்லூரி மாணவிகள், ஆடை, ஆபரணங்கள் மற்றும் உணவு பொருள்கள் போன்றவற்றில் தொழில் முனைவோராகலாம். சமூகத்தில் பல்வேறு தடைகளைத்தாண்டி ஆயிரக்கணக்கான பெண் தொழில்முனைவோா் ரூ.50 லட்சம் முதல் ரூ.50 கோடி வரை வா்த்தகத்தில் ஈடுபடுகின்றனா். மேலும் பாதுகாப்புத்துறைக்கான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களையும் பெண்கள் பலா் நடத்தி வருகின்றனா். இந்தியாவின் பலம் மக்கள்தொகையில் உள்ளன. எனவே அபரிமிதமான மனித சக்தியை பயன்படுத்தும் தொழில் முனைவோராக சிந்திக்க வேண்டும் என்றாா். கருத்தரங்கில் பேராசிரியைகள், மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com