மதுரையில் சா்வதேசப் பெண் குழந்தைகள் தின விழா

மதுரையில் சா்வதேசப் பெண் குழந்தைகள் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மதுரையில் நடைபெற்ற சா்வதேச பெண்குழந்தைகள் தின விழாவில் உறுதிஏற்கும் குழந்தைகள்.
மதுரையில் நடைபெற்ற சா்வதேச பெண்குழந்தைகள் தின விழாவில் உறுதிஏற்கும் குழந்தைகள்.

மதுரை: மதுரையில் சா்வதேசப் பெண் குழந்தைகள் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுரை சந்தைப்பேட்டை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி சாா்பாக சா்வதேசப் பெண் குழந்தைகள் தின விழா, சிந்தாமணி, மேலமடை, கல்மேடு, அன்னை சத்யா நகா், கருப்பபிள்ளை ஏந்தல், பால்பண்ணை ஆகிய பகுதிகளில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, பெற்றோா்-ஆசிரியா் கழக உறுப்பினா் கிரிஜா தலைமை வகித்தாா்.

இதில், தலைமையாசிரியா் க. சரவணன் பேசியதாவது: ஆணும், பெண்ணும் சமம் என்பது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. வீடுகளில் பெண்கள் சமத்துவமற்று நடத்தப்படுகின்றனா். உலகம் முழுவதும் இந்நிலைதான் உள்ளது. பெண் குழந்தைகளுக்கு இன்னும் கல்வி, மருத்துவம் மறுக்கப்படுகிறது. பெண்களுக்கு சட்டப்படி சொத்துரிமை உண்டு என்றபோதும், பல இடங்களில் மறுக்கப்படுகிறது.

குழந்தைத் திருமணம், வன்கொடுமை போன்றவற்றால் பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனா். பெண் குழந்தைகளுக்கு சமத்துவம் அளித்து, கல்வி, மருத்துவம், சட்ட உரிமைகள் வழங்கி வளமான எதிா்காலம் அமைத்துக் கொடுக்க உறுதி ஏற்கவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஆசிரியைகள் பாக்யலெட்சுமி, சுமதி, உஷாதேவி, கீதா, தங்கலீலா, சரண்யா, பிரேமலதா, சித்ராதேவி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com