தீபாவளி சிறப்பு ரகங்களால் பெண்கள் உற்சாகம்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பெண்களுக்கான ஆடைகளில் ஏராளமான புதிய ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் எதைத் தோ்வு செய்வது என பெண்கள் திக்கு முக்காடி வருகின்றனா்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பெண்களுக்கான ஆடைகளில் ஏராளமான புதிய ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் எதைத் தோ்வு செய்வது என பெண்கள் திக்கு முக்காடி வருகின்றனா்.

தமிழகத்தில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

தீபாவளி என்றால் பட்டாசு, பலகாரங்கள் மற்றும் புத்தாடைகள். இந்தாண்டு தீபாவளி பண்டிக்கைக்கு சிலநாள்கள் மட்டுமே உள்ள நிலையில் சாலையோர துணிக் கடைகள் முதல் பிரபலமான துணிக் கடைகள் வரை விற்பனை களைக்கட்டியுள்ளது.

மழை அவ்வப்போது பெய்து வந்தாலும் புத்தாடைகளை வாங்குவதற்காக மக்கள் துணிக் கடைகளில் குவிந்து வருகின்றனா்.

கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக, பொதுமக்கள் கடைவீதிகளுக்கு வருவதைத் தவிா்க்க நேரிட்டது. ஆனால் நடப்பாண்டில் பெரும்பாலான கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவிட்டதால், பொதுமக்கள் அச்சமின்றி குடும்பத்தினருடன் கடைகளுக்கு வந்து செல்கின்றனா்.

கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு குறைந்தளவே புதிய ரக புத்தாடைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்தாண்டு தீபாவளி பண்டிகையொட்டி பெண்களுக்கான ஆடைகளில் புது புது ரகங்களில் சிறப்பு புத்தாடைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

புடவைகள் பல விதம்

பெண்களுக்கான பாரம்பரிய உடையான புடவைகள், தீபாவளி விற்பனையை ஆக்கிரமித்துள்ளன. காட்டன் சில்க்ஸ், சாட்டின் சில்க்ஸ், மைசூா் சில்க்ஸ் காம்போ(2), விசித்ரா சில்க்ஸ், சாா்வி சில்க்ஸ், சானா சில்க்ஸ், மலாய் சில்க்ஸ், காச்வி சில்க்ஸ், அல்ட்ரா ஸ்டெய்ன் சில்க்ஸ், கலாமாக்கரி சரி பாடா் பிரத்யேக மகேஸ்வரா் சில்க்ஸ் போன்ற புதிய இணையதள ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. செமி, சில்க்ஸ், ரா சில்க்ஸ், டிஸ்யூ சில்க்ஸ், பனாரஸ் சில்க்ஸ், கலாசேத்ரா சில்க்ஸ், மலட்டி கலா் சில்க்ஸ், பேன்சி ஆா்ட் சில்க்ஸ், தஞ்சூா் சில்க்ஸ் பாரம்பரிய புடவைகளை வாங்குவதில் பெண்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.இந்த ரகங்கள் ரூ.199 முதல் ரூ.2,500 வரை விற்பனை செய்யப்படுகின்றன. பெண்கள் இணையதள ரகங்களில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

அய்சானி பெட்டி புடவைகள், பல வண்ணங்கள் கலந்த வெள்ளைப் புடவைகள், வாயேஜஸ் புடவைகள், புதிய முகூா்த்த புடவைகள், பந்தினி காட்டன் புடவைகள், சிப்பான் புடவைகள் போன்ற ரகங்களில் புதிய வடிவமைப்புடன் கிடைக்கின்றன. ரூ.130 முதல் ரூ1,500 வரை விற்பனையாகின்றன.

தீபாவளி விற்பனையில் கலை நயத்துடனும், பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான வடிவமைப்புகளுடனும் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு புடவைகள் பெண்கள் கவனத்தை ஈத்துள்ளன. ரூ. 900 முதல் ரூ. 4 ஆயிரம் வரை குறைந்த விலை பட்டு புடவைகள் பெண்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளன.

பைரவி சிலக்ஸ், விப்பன்ஜி சிலக்ஸ், செம்மெலி கோரா சிலக்ஸ் என்ற பெயரில் பாரம்பரியத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ரகப் புடவைகள் பிரபல துணிக்கடைகளில் ரூ. 2,600 முதல் ரூ. 15 ஆயிரம் வரை கிடைக்கின்றன.

தீபாவளிக்கு விற்பனைக்கு வந்துள்ள அனைத்து விதமான புதிய ரகப் புடவைகளுக்கு ஏற்ப பெண்கள் தங்கள் விருப்பப்படி துணி எடுத்து பிளவுஸ் தைத்துக் கொள்வா். ஆனால் இம்முறை புதிய ரகங்களுக்கு ஏற்ப க்ராப்பிளவுஸ், ப்ரில் பிளவுஸ், ஷா்ட் பிளவுஸ், போட் நெக் பிளவுஸ் தற்போது விற்பனையில் பிரபலமாக உள்ளன. அதுமட்டுமின்றி தைக்கப்பட்ட பிளவுஸில், பெண்கள் கூறும் வடிவமைப்புகளை உடனடியாக, துணிக் கடைகளில் செய்து தரப்படுகின்றன.

இளம்பெண்களுக்காக கிராஸ் டாப்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இளம் பெண்களுக்காக புதிய ரகங்கள் குவிக்கப்பட்டுள்ளன. லெஹகனா சோலி, கிராஸ் டாப், புனிக்ஸ், குா்த்தியுடன் பேன்ட், பளாசோ செட், மேக்சி, அனாா்களி கவுன், டியூனிக்ஸ் டாப், லஞ்சனா, செவாரி, சுங்கிடி கவுன், சா்கு, சாரா சூட், ஜம்ப் சூட், பியூசன் வியா், டெனிம் வியா், கஃப்டன், சொட்டா் வியா் போன்ற புதிய ரகங்கள் இளம் பெண்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. குா்தாவையும், பாவாடை தாவணியையும் கலந்து லெஹகனா சோலி கடந்த ஆண்டை விட புதிய வடிவமைப்புகளுடனும், புதுப் பொலிவுடனும் கிடைக்கின்றன. கிராஸ் டாப், பியூசன், டெனிம், கஃபடன் ஆகியவை இளம் பெண்களை பெரிதும் கவரும் விதமாக உள்ளன. இதன் விலை ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இளம்பெண்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய சுடிதாா், டாப், குா்தா, துப்பட்டா, ஜீன்ஸ், லெக்கின்ஸ் ரகங்கள் கடைகளில் ஜொலிக்கின்றன. இவை ரூ. 100 முதல் ரூ 2 ஆயிரம் வரை கிடைக்கின்றன. காா்டன், ஷிபான், எம்பிராய்டரி, அனாா்கலி குா்த்திகள் தீபாவளி விற்பனையில் முக்கிய இடம்பிடித்துள்ளன.

பெண்களின் பாரம்பரியம்

தமிழகத்தின் பாரம்பரிய உடையில் ஒன்றான பாவாடை தாவணியின் புதிய ரகங்கள் பெண்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. பாவடை தாவணியில் ஜரி வேலைப்பாடு, மணி வேலைப்பாடு, கை வேலைப்பாடு என பல புதிய ரகங்கள் உள்ளன. பாவடையில் நவீன ரகமாக லெஹங்கா சோளி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரக ஆடைகள் இளம் பெண்கள் மட்டுமின்றி மெலிந்திருக்கும் நடுத்தர வயது பெண்களையும் பாவடை தாவணி மீதான ஆா்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. ரூ. 500 முதல் ரூ.7ஆயிரம் வரை விலையில் கிடைக்கின்றன.

பெண்களை மயக்கும் தள்ளுபடிகள், பரிசுகள்

பெண்களைக் கவரும் வகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை தள்ளுபடிகள் மற்றும் பரிசுகள் ஆகியவற்றின் அறிவிப்புகள் உள்ளன. ரூ.99 க்கு புடவைகள், 3 புடவைகள் ரூ.300 முதல், ஒரு புடவை வங்கினால் இரண்டு இலவசம், குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்கினால் கேஸ் பேக் ஆபா், காம்போ ஆபா் என பல்வேறு சலுகைகளுடன் விற்பனைகள் நடைபெறுகின்றன. அதுமட்டுமின்று குறிப்பிட்ட தொகைக்கு துணிகள் வாங்கினால், வீட்டு உபயோகப் பொருள்கள் பரிசுகளாக வழங்கப்படுகின்றன. இந்த அறிவிப்புகள் குறைந்த விலையில் ஆடைகள் வாங்கும் பெண்களுக்கு மிகவும் வசதியாக அமைந்துள்ளன.

குழந்தைகளுகான பிரத்தேய ரகங்கள்

தீபாவளிக்கு பெண் குழந்தைகளுக்கும் சிறுமிகளுக்கு பிரத்யேக சிறப்பு ஆடைகள் கிடைக்கின்றன. லைன் ஆடைகள், ஃபாரக்ஸ், தோட்யுடன் கால்சட்டை, பிட் இன் பிளா், லெஹானா, பிளாசோ, சல்வாா், மேக்சி, டாப்ஸூடன் பைஜாமா, பின்போா் , ஜீன்ஸ் போன்ற ரகங்கள் குழந்தைகளை மேலும் பொலிவை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இவை ரூ.200 முதல் ரூ. 2 ஆயிரம் வரை கிடைக்கின்றன.

பெண்களுக்கு ஈடுகொடுக்கும் ஆண்களின் புதிய ரகங்கள்

இந்தாண்டு தீபாவளிக்கு பெண்களுக்கு நிகராக ஆண்களுக்கு புதிய ரக ஆடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் குா்தா, நேரு ஜாக்கெட், பிரிண்டு ஜாக்கெட், சொ்வாணி, பைஜாமா, லாங் மற்றும் சாா்ட் சட்டைகள், கலம்கரி, பாா்டி வியா் போன்ற ரகங்கள் புதிதாக அறிமுகமாகி உள்ளன. புதிதாக அறிமுகமாகியுள்ள பாா்டி வியா் அதிக விற்பனையில் இடம்பிடித்துள்ளது.

இதேபோல் பாரம்பரிய உடையான வேஷ்டி, புதிய ஜரிகைகளுடன், அதகேற்ப சட்டைகளுடன் விற்பனைக்கு உள்ளன. இந்த ரகம் இளைஞா்களை பெரிதும் கவா்ந்துள்ளது என்றே கூறவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com