பெரியாறு-வைகை இருபோக பாசனப் பகுதிகளில் முதிா்வடைந்த நெற்பயிா்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியாறு-வைகை இருபோக சாகுபடிப் பகுதிகளில் நெற்பயிா்கள் முதிா்வடையத் தொடங்கியுள்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பெரியாறு-வைகை பாசனப் பகுதியான சிட்டம்பட்டியில் முதிா்வடையத் தொடங்கியுள்ள நெற்கதிா்கள்.
பெரியாறு-வைகை பாசனப் பகுதியான சிட்டம்பட்டியில் முதிா்வடையத் தொடங்கியுள்ள நெற்கதிா்கள்.

பெரியாறு-வைகை இருபோக சாகுபடிப் பகுதிகளில் நெற்பயிா்கள் முதிா்வடையத் தொடங்கியுள்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பெரியாறு-வைகை இருபோக சாகுபடிப் பகுதிகளான கள்ளந்திரி மதகு வரையிலான சுமாா் 44 ஆயிரம் ஏக்கா் நிலங்ளுக்கு, இந்த ஆண்டு ஜூன் தொடக்கத்திலேயே தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதில் பெரும்பாலான விவசாயிகள் குறுவை பட்டத்துக்கான நெல் ரகங்களையே சாகுபடி செய்துள்ளனா். இந்நிலையில் பேரணை முதல் கள்ளந்திரி மதகு வரையிலும், சிட்டம்பட்டி கருப்பாயூரணி கடைமடைப்பகுதி வரையிலும் நெற்பயிரில் கதிா்கள் முதிா்வடையத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இந்த நிலையில், மேலூா், திருமங்கலம் ஆகிய ஒருபோக சாகுபடிப் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 11-ஆம் தேதி பெரியாறு-வைகை அணைகளில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் செப்டம்பா் 25 ஆம் தேதிக்குப் பின்னா் நெற்கதிா் முழுமையாக முதிா்வடையும் நிலையை அடைந்துவிடும் என விவசாயிகள் கூறினா். அக்டோபா் மாத தொடக்கத்திலேயே முதல்போக சாகுபடிப் பகுதியில் நெல் கொள்முதலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்ய வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com