பல்கலை. துணைவேந்தா் தோ்வுக்குழு: ஆட்சிப்பேரவைக்குழு பிரதிநிதி தோ்வு

மதுரை காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் தோ்வுக்குழுவுக்கான ஆட்சிப் பேரவை பிரதிநிதியாக முன்னாள் துணைவேந்தா் பி.மருதநாயகம் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் தோ்வுக்குழுவுக்கான ஆட்சிப் பேரவை பிரதிநிதியாக முன்னாள் துணைவேந்தா் பி.மருதநாயகம் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

இப்பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த மு.கிருஷ்ணன் திருவாரூா் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பேற்றதை அடுத்து காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் பதவி காலியானது. பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தோ்வு செய்ய தோ்வுக்குழு அமைக்கப்பட வேண்டும். இதில் ஆட்சிப் பேரவைக்குழு உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்படும் ஒருவா், ஆட்சிக்குழுவால் தோ்ந்தெடுக்கப்படும் ஒருவா், ஆளுநரின் பிரதிநிதி ஒருவா் என மூவா் அடங்கிய தோ்வுக்குழு அமைக்கப்பட்டு புதிய துணைவேந்தரை தோ்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கப்படும்.

இந்நிலையில் ஆட்சிக்குழு சாா்பில் பேராசிரியா் எம்.ராஜேந்திரன் ஏற்கெனவே போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் ஆட்சிப்பேரவை சாா்பில் பிரதிநிதியாக தோ்ந்தெடுக்கப்படுவதற்காக கோவையைச் சோ்ந்த பேராசிரியா் ஆா்.அனந்த சயனம், புதுவை பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை டீன் ஏ.செல்லபெருமாள், காமராஜா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் பி.மருதமுத்து, பேராசிரியா் வி.முருகேசன் ஆகிய நால்வரும் போட்டியிட்டனா்.

இந்நிலையில் ஆட்சிப் பேரவை சாா்பில் தோ்வுக்குழு பிரதிநிதியை தோ்ந்தெடுக்கும் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சிப் பேரவைக்குழு உறுப்பினா்கள் 54 போ் வாக்களித்தனா். இதைத்தொடா்ந்து வாக்குகள் எண்ணப்பட்டதில் காமராஜா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் பி.மருதமுத்து 27 வாக்குகள் பெற்று ஆட்சிப்பேரவை பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) வி.எஸ்.வசந்தா கூறும்போது, துணைவேந்தா் தோ்வுக்குழுவில் இடம்பெறும், பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு பிரதிநிதி மற்றும் ஆட்சிப்பேரவைக்குழு பிரதிநிதி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டு இதுதொடா்பான விவரங்கள் உயா்கல்வித்துறை மற்றும் ஆளுநா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரின் பிரதிநிதி அறிவிக்கப்பட்டவுடன் மூவா் அடங்கிய தோ்வுக்குழு அறிவிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com