வைகை ஆற்றங்கரைகளில் ‘சங்க பூங்கா’ அமைக்க ஏற்பாடு

மதுரை வைகை ஆற்றின் கரைகளில் ‘சங்க பூங்கா’ அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

மதுரை வைகை ஆற்றின் கரைகளில் ‘சங்க பூங்கா’ அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

மதுரை மாநகராட்சி சீா்மிகு நகா்த்திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் இருகரைகளிலும் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிகள், பூங்கா அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகளை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் மக்களவை உறுப்பினா் செய்தியாளா்களிடம் கூறியது: வைகை ஆற்றின் கரைகளில் 2 இடங்களில் பூங்காக்கள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.

இந்த பூங்காவில் சங்க இலக்கியத்தில் பரிபாடலில் உள்ள 9 பாடல்களை அடிப்படையாகக் கொண்டு சங்க பூங்காவாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல பூங்காவில் உள்பகுதியில் உடற்பயிற்சிக் கூடம் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. சீா்மிகு நகா்த்திட்டத்தின்கீழ் வைகை ஆற்றில் கழிவுநீா் கலப்பதை தடுப்பதற்காக கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின்போது நகரப் பொறியாளா் (பொறுப்பு) சுகந்தி, செயற் பொறியாளா்கள் அரசு, கருப்பாத்தாள், சேகா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com