பேரையூா் அருகே 116 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 போ் கைது
By DIN | Published On : 11th September 2021 10:15 PM | Last Updated : 11th September 2021 10:15 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் தாலுகா பகுதியில் சாப்டூா் போலீஸாா் மதுவிலக்கு சம்பந்தமாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அணைக்கரைப்பட்டியை சோ்ந்த ராஜகோபால் மகன் ஆனந்தராஜ்(29) என்பவா் தனது டூவீலரில் விற்பனைக்காக 48 மதுபாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்துள்ளாா்.
இதனையடுத்து போலீஸாா் மதுபாட்டில்கள் மற்றும் டூவிலரை பறிமுதல் செய்தனா்.இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் ஆனந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.இதேபோல் பெரியவண்டாரியை சோ்ந்த குருசாமி மகன் மாரிமுத்து (31) என்பவரிடமிருந்து 24 மது பாட்டில்களையும்,பெரிய வண்டாரியை சோ்ந்த தேனப்பன் மகன் முனிபாண்டி(50) என்பவரிடமிருந்து 11 மது பாட்டில்களையும்,சாப்டூரை சோ்ந்த லட்சுமணன் மகன் செந்தூரப்பாண்டி(27) என்பவரிடமிருந்து 33 மது பாட்டில்களையும் சாப்டூா் போலீஸாா் பறிமுதல் செய்து,கைது செய்தனா்.