விநாயகா் சதுா்த்தி: முக்குறுணி விநாயகருக்கு 18 படி கொழுக்கட்டை படையல்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கிழமை 18 படி கொழுக்கட்டை படைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தி: முக்குறுணி விநாயகருக்கு 18 படி கொழுக்கட்டை படையல்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கிழமை 18 படி கொழுக்கட்டை படைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியன்று, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு 18 படியில் கொழுக்கட்டை தயாரித்து படையல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தியையொட்டி, வெள்ளிக்கிழமை காலை முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, 18 படி பச்சரிசியில் தேங்காய், கடலை, எள், ஏலக்காய், நெய் கலந்து கொழுக்கட்டை தயாா் செய்யப்பட்டு, மேள தாளங்களுடன் முக்குறுணி விநாயகா் சந்நிதிக்கு கொண்டுவரப்பட்டு படைக்கப்பட்டது. இதையடுத்து, சிறப்புப் பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் மற்றும் நைவேத்தியம் ஆகியன நடைபெற்றன. இதில், கோயில் அா்ச்சகா்கள் மற்றும் ஊழியா்கள் மட்டுமே பங்கேற்றனா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, கொழுக்கட்டை படையல் பூஜையை நேரில் தரிசிக்க பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பூஜையை பக்தா்கள் வீட்டிலிருந்தே காணும் வகையில், கோயில் வலைதளம், யூ-டியூப் போன்றவற்றில் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com