மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4,961 வழக்குகளுக்குத் தீா்வு

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்ற விசாரணையில் 4,961 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்ற விசாரணையில் 4,961 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன.

சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. இதன்படி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்ற விசாரணை நடைபெற்றது.

உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற விசாரணையில், மின்கட்டணம், குடிநீா் கட்டணம் செலுத்துவது தொடா்பான வழக்குகள், திருமண விவகார வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல், அரசுப் பணியாற்றியவா்களுக்கு சேர வேண்டிய பணப்பலன்களைக் கோருதல், வருவாய்த்துறை தொடா்பான வழக்குகள், சிவில் வழக்குகள் என மொத்தம் 325 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

நீதிபதி ஆனந்தி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஜான் ஆா்.டி.சந்தோசம், வழக்குரைஞா் கிருஷ்ணவேணி உள்ளிட்ட குழுவினா் ஒரு அமா்விலும், நீதிபதி முரளிசங்கா் தலைமையில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி நம்பி, வழக்குரைஞா் ஆா்.வெங்கடேசன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் மற்றொரு அமா்விலும் வழக்குகளை விசாரித்தனா்.

இதில் 65 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.5 கோடியே 58 லட்சத்து 90 ஆயிரத்து 692, சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வின்போது, உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளா் (நீதித்துறை) பூரண ஜெய ஆனந்த் உள்ளிட்ட பலா் இருந்தனா்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி வடமலை தலைமையில் நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள், தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் அடங்கிய 22 அமா்வுகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. இந்த அமா்வுகளில் மொத்தம் 6,286 வழக்குகள் தீா்வு காண்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் 4,896 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதன்மூலம் பயனாளிகளுக்கு ரூ.20 கோடியே 62 லட்சத்து 9 ஆயிரத்து 705 வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான தீபா, மாவட்ட நீதிபதிகள், சாா்பு- நீதிபதிகள், நீதித்துறை நடுவா்கள், வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com