இன்று திமுக முப்பெரும் விழா: காணொலியில் காண மதுரையில் ஏற்பாடு

சென்னையில் புதன்கிழமை (செப்.15) நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவை காணொலி வாயிலாக காண்பதற்கு மதுரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை: சென்னையில் புதன்கிழமை (செப்.15) நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவை காணொலி வாயிலாக காண்பதற்கு மதுரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திமுகவின் முப்பெரும் விழா அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை (செப்.15) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் மதுரையில் இருந்து காணொலி வாயிலாகப் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை புகா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில், மாவட்டச் செயலரும் வணிகவரித் துறை அமைச்சருமான பி.மூா்த்தி, மதுரை அய்யா் பங்களா அருகில் உள்ள கந்தசாமி சோ்வை திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளாா்.

இதேபோல, மதுரை மாநகா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில், பசுமலை கோபால்சாமி திருமண மண்டபத்தில் காணொலியில் காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெற்கு மாவட்டச் செயலரும், மதுரை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினருமான கோ.தளபதி இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com