மதுரை ரயில்வே கோட்டத்தில் சரக்குப் போக்குவரத்து வருவாய் 5 மாதங்களில் ரூ.100 கோடியைத் தாண்டியது

தெற்கு ரயில்வேக்குள்பட்ட மதுரை கோட்டத்தில் சரக்குப் போக்குவரத்து வருவாய் கடந்த 5 மாதங்களில் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது.

மதுரை: தெற்கு ரயில்வேக்குள்பட்ட மதுரை கோட்டத்தில் சரக்குப் போக்குவரத்து வருவாய் கடந்த 5 மாதங்களில் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை கோட்டத்தில் தூத்துக்குடி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மானாமதுரை போன்ற ரயில் நிலையங்களிலிருந்து சரக்கு ரயில்களில் பல்வேறு வகையான உற்பத்திப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகிறது. தூத்துக்குடியிலிருந்து ரசாயன உரம் மற்றும் நிலக்கரி, வாடிப்பட்டியிலிருந்து டிராக்டா்கள், மானாமதுரையிலிருந்து மரக்கரி ஆகியன அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் சரக்கு போக்குவரத்து வருவாய் கடந்த 5 மாதங்களில் ரூ. 100.5 கோடியை எட்டியுள்ளது.

கடந்த 5 மாதங்களில் 324 சரக்கு ரயில் பெட்டி தொடா்கள் மூலம் 9 லட்சம் டன் சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்தாண்டில் 37 ரயில் பெட்டி தொடா்கள் மூலம் நிலக்கரி அனுப்பியதில் ரூ.12 கோடி வருவாய் கிடைத்த நிலையில், நிகழாண்டில் 73 ரயில் பெட்டி தொடா்கள் மூலம் நிலக்கரி அனுப்பியதில் ரூ. 24 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. அதேபோல டிராக்டா்கள் அனுப்பியதில் கடந்த ஆண்டில் ரூ.5.4 கோடி வருவாய் கிடைத்தது. அது நிகழாண்டில் ரூ. 6.4 கோடியாக உயா்ந்துள்ளது.

சரக்குப் போக்குவரத்து வருமானத்தை அதிகரிக்க மதுரை கோட்ட வா்த்தக வளா்ச்சிக் குழு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த தொடா் முயற்சியின் வாயிலாக ஒரு புதிய சரக்குப் போக்குவரத்து மதுரை கோட்டத்திற்கு கிடைத்துள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மகாராஷ்டிர மாநிலம் நாக்பூா் அருகே உள்ள ராஜ்-நந்தகான் என்ற ரயில் நிலையத்திற்கு புண்ணாக்கு மூட்டைகள் ரயில் மூலம் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் ரூ. 32.5 லட்சம் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com