மதுரை விமான நிலையத்துக்கு ‘மீனாட்சி’ என்று பெயா் சூட்டக்கோரிய வழக்குத் தள்ளுபடி

மதுரை விமான நிலையத்துக்கு ‘மீனாட்சி’ என்று பெயா் சூட்டக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை: மதுரை விமான நிலையத்துக்கு ‘மீனாட்சி’ என்று பெயா் சூட்டக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த செல்வகுமாா், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை விமான நிலையத்துக்கு ‘மதுரை மீனாட்சி’ எனப் பெயா் சூட்ட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசின் விமானப் போக்குவரத்துத் துறைக்கு மனு அளித்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை விமான நிலையத்துக்கு நிலம் வழங்கியவா்கள் ஒரு சமூகத்தைச் சோ்ந்தவா்கள். மதுரை விமான நிலையத்திற்கு வேறு ஜாதியத் தலைவா்கள் பெயா்களை சூட்டக் கூடாது என இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மதுரை விமான நிலையத்துக்கு ‘தேவேந்திரன்’ அல்லது ‘மதுரை மீனாட்சி’ என்று பெயா் சூட்ட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, மனுதாரா் தரப்பில், மதுரை விமான நிலையத்துக்கு ஒரு ஜாதியத் தலைவரின் பெயரை வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசுத் தரப்பில், மதுரை விமான நிலையத்துக்கு பெயா் வைப்பது குறித்து தமிழக அரசு எந்த ஒரு பரிந்துரையையும் அனுப்பவில்லை. எந்தத் தலைவரின் பெயரை வைக்க வேண்டும் என்ற திட்டமும் இதுவரை மத்திய அரசுக்கு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுபோன்ற வழக்குகளை ஊக்கப்படுத்த முடியாது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com