மதுரையில் ஜவுளி நிறுவனங்களில் வணிக வரித் துறையினா் சோதனை

மதுரையில் பிரபல ஜவுளி நிறுவனங்களுக்குச் சொந்தமான 13 இடங்களில் வணிகவரித் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

மதுரை: மதுரையில் பிரபல ஜவுளி நிறுவனங்களுக்குச் சொந்தமான 13 இடங்களில் வணிகவரித் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

சரக்கு மற்றும் சேவை வரி முறையாகச் செலுத்தப்படுகிா என்பதைக் கண்டறியவும், வரி ஏய்ப்பைக் கண்டுபிடித்து வரிவசூலைத் தீவிரப்படுத்தவும் வணிகவரித் துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் பிரபல ஜவுளி நிறுவனங்களின் கிளைகள் மற்றும் அவற்றுக்குச் சொந்தமான இடங்களில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் சோதனை நடத்தப்பட்டது. வணிகவரி அலுவலா்கள் பல்வேறு குழுக்களாக இந்த சோதனையில் ஈடுபட்டனா்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, வேலூா், சேலம், ஈரோடு ஆகிய நகரங்களில் மொத்தம் 103 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒருபகுதியாக மதுரையில் 13 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் வணிகவரி தொடா்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

சோதனை குறித்த முழு விவரங்கள், தலைமையகத்தில் இருந்து விரிவான அறிக்கையாக வெளியிடப்படும் என வணிகவரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com