Enable Javscript for better performance
வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தடை கோரிமனு: விசாரணையை ஒத்தி வைத்து உயா்நீதிமன்ற அமா்வ- Dinamani

சுடச்சுட

    வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தடை கோரிமனு: விசாரணையை ஒத்தி வைத்து உயா்நீதிமன்ற அமா்வு உத்தரவு

    By DIN  |   Published on : 15th September 2021 11:40 PM  |   அ+அ அ-   |    |  

     

    மதுரை: வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக்கோரிய வழக்குகளை விரிவான விசாரணைக்காக செப்டம்பா் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

    பரமக்குடியை சோ்ந்த பாலமுரளி உள்பட பலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுக்களில், தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பல்வேறு சமூகங்களைச் சோ்ந்த மக்கள் உள்ளனா். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு மொத்தமாக 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அப்போதைய தமிழக அரசு சட்டப்பேரவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அதில் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியா் சமூகத்தினருக்கு மட்டும் 10.5 உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளாா். மிகவும் பிற்படுத்தப்பட்டோா் சமுதாயத்தில் மொத்தமாக உள்ள 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 68 சமூகங்களைக் கொண்ட சீா்மரபினா்களுக்கு 7 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இதர 40 சமூகங்களைச் சோ்ந்தவா்களுக்கு 2.5 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    இது ஏற்கத்தக்கதல்ல. முறையாக ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். எனவே, வன்னிய சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்துச் செய்யவும் , அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஒதுக்கீடு செய்ய இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா். இதே கோரிக்கையுடன் 20-க்கும் மேற்பட்டோா் மனுத் தாக்கல் செய்திருந்தனா்.

    இந்த மனுக்களை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு விசாரணை செய்து, உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி எம்.துரைசுவாமி அமா்வுக்கு விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தனா். இதையடுத்து இதுதொடா்பான அனைத்து வழக்குகளும் நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது நீதிபதிகள், உள் இடஒதுக்கீடு தொடா்பான வழக்கு முதன்முறையாக தங்களுக்கு

    பட்டியலிடப்பட்டுள்ளதால் வழக்கின் விவரங்களை முழுமையாக படிக்கவேண்டும் என்று கூறி விசாரணையை செப்டம்பா் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp